உலக மனநல தினத்தை முன்னிட்டு: போலீசாருக்கு மன அழுத்த குறைப்பு பயிற்சி


உலக மனநல தினத்தை முன்னிட்டு: போலீசாருக்கு மன அழுத்த குறைப்பு பயிற்சி
x
தினத்தந்தி 10 Oct 2021 8:17 AM IST (Updated: 10 Oct 2021 8:17 AM IST)
t-max-icont-min-icon

உலக மனநல தினத்தை முன்னிட்டு: போலீசாருக்கு மன அழுத்த குறைப்பு பயிற்சி கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

சென்னை,

உலக மனநல தினத்தை முன்னிட்டு சென்னை போலீஸ் துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு உள்பட பிரிவுகளில் பணியாற்றும் மன அழுத்ததுக்கு உள்ளான போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்து, போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார்.

போலீசாருக்கு தனியார் பவுண்டேசன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் லட்சுமி, அபிலாஷா, சுஜாதா, அபிஷேக் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் எல்.பாலாஜி சரவணன், உதவி கமிஷனர்கள் உள்பட 105 போலீசார் பங்கேற்றனர்.

சென்னை போலீஸ்துறையில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு சமநிலை வாழ்வு முறை குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி வைத்தார். இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. புதுப்பேட்டை ஆயுதப்படை துணை கமிஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் இணை போலீஸ் கமிஷனர் (தலைமையிடம்) பி.சாமுண்டீஸ்வரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Next Story