கடம்பத்தூரில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை


கடம்பத்தூரில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2021 7:26 AM GMT (Updated: 10 Oct 2021 7:26 AM GMT)

கடம்பத்தூரில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் ரெயில் நிலையம் உள்ளது. திருவள்ளூர்-பேரம்பாக்கம் சாலையில் ரெயில் நிலையம் அருகில் ரெயில்வேகேட் ஒன்று அமைந்துள்ளது. இது ரெயில்கள் வந்து செல்லும் போது அடிக்கடி மூடப்படுவதால் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதியுற்று வந்தனர்.

இதற்கு தீர்வாக கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ரூ.14 கோடியே 85 லட்சம் மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

அதற்காக ரெயில்வே கேட்டில் இருபுறங்களிலும் இருந்த கட்டிட உரிமையாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு கடைகள், வீடுகள் அகற்றப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்த பணி கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

தற்போது அனைத்து பணிகளும் முழுவதுமாக முடிவடைந்து திறப்புக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக திறந்து வைக்கப்படவில்லை. இந்த ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டால் கடம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் எளிதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருவார்கள். இந்த நிலையில், கட்டிமுடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள இந்த ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story