உடன்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
உடன்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
உடன்குடி:
திருச்செந்தூர் வட்ட சட்ட பணிகள் குழுவும், தமிழ்நாடு நுகர்வோர் பேரவையும் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம் உடன்குடி கிறிஸ்தியாநகரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாவட்ட சட்ட ஆலோசகர் ஜே. எஸ்.டி.சாத்ராக் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு நூகர்வேர்பேரவை நிறுவனர் தலைவர் மோகனசுந்தரம், பள்ளி தலைமையாசிரியர் ஜெபசிங் மனுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் திருச்செந்தூர் சார்பு நீதிபதியுமான பி.வி வஷித்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி : பேசியதாவது:-
பொதுமக்களுக்கு அனைத்து சட்ட வசதிகளையும் இலவசமாக கொடுப்பதற்காக அரசு சார்பில் அமைக்க பட்டது தான் வட்ட சட்ட பணிகள் குழு. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மனுக்கள் எழுதி கொடுப்பதற்கும் இங்கு நாங்கள் ஆட்கள் வைத்துள்ளோம். அதேபோல பட்டா மாறுதல், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெறுவதற்கும், காலதாமதம் ஆனாலும் எங்களிடம் மனு தாக்கல் செய்யலாம். மேலும் நீதிமன்றத்தில் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வந்தால் கூட பயப்படாமல் அதற்குப் பதில் மனு கொடுப்பதற்கு வட்ட சட்ட பணிகள் குழுவுக்கு வரலாம். மேலும் போலீஸ் வந்து உங்களை காவல் நிலையத்துக்கு வாருங்கள் என்று அழைத்தால் கூட இங்கு வந்து விபரம் கேட்கலாம். வாகன விபத்து, வரதட்சணை கொடுமை இப்படி சட்டம் சார்ந்த, சட்டம் சாராத பிரச்சனைகள் அனைத்திற்கும் வட்ட சட்ட பணிகள் குழுவுக்கு வந்தால் நாங்கள் இலவசமாக எல்லா உதவியும் செய்து தரவும் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வக்கீல் சங்க தலைவர் ஜேசுராஜா, நூகர்வோர்பேரவை சட்ட ஆலோசகர் பிரிதிவிராஜ், வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் அருள் மணி, சட்ட தன்னார்வலர் ராஜேஷ், சட்ட கல்லூரி மாணவிகள் அகஸ்டா, துர்க்காதேவி, பேரவையை சேர்ந்த ஆலோசகர் ராஜதுரை, வட்டாரத் தலைவர் ரகுமத்துல்லா, கவுரவ ஆலோசகர் ஜோதிபாசு, அமைப்பாளர் முஹமது ஹாலிது, ஓய்வு பெற்ற ஆசிரியர் சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். வக்கீல் எட்வர்ட் நன்றி கூறினார்
Related Tags :
Next Story