ராணுவ குடியிருப்பில் புகுந்த காட்டெருமைகள்


ராணுவ குடியிருப்பில் புகுந்த காட்டெருமைகள்
x

ராணுவ குடியிருப்பில் புகுந்த காட்டெருமைகள்

குன்னூர்

குன்னூர் அருகே ராணுவ குடியிருப்பில் புகுந்த காட்டெருமைகள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை சேதப்படுத்தியது. 


உலா வரும் காட்டெருமைகள்

குன்னூர் கிராமப்புற பகுதிகளில் தற்போது காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொது மக்களின் உடமைகளை சேதப்படுதுவதோடு விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. கிராமப்புற பகுதிகள் மட்டுமின்றி காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக நகர பகுதிகளிலும் சில நேரங்களில் உலா வருகின்றன.
குன்னூர்அருகே உள்ள பேரக்ஸில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் குடியிருப்பு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு  குடியிருப்பு பகுதியில் 2 காட்டெருமைகள் புகுந்தன. அந்த சமயத்தில் குடியிருப்புகளில் பெண்கள் மட்டுமே இருந்தனர். இதனால் காட்டெருமைகளை விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

குடியிருப்பில் புகுந்தன

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை முட்டி தள்ளி சேதம் ஏற்படுத்தின. நேற்று அதிகாலை வரை அந்த 2 காட்டெருமைகளும் குடியிருப்பு பகுதியிலேயே முகாமிட்டு இருந்தன.இதுகுறித்து குயிருப்பு மக்கள் எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். 
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து ராணுவ குடியிருப்பில் புகுந்த காட்டெருமைகளை அங்கிருந்து விரட்டியடித்தனர். காட்டெருமைகள் ராணுவ குடியிருப்பில் புகுந்ததோடு, வாகனங்களை சேதப்படுத்தியது அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story