தாயை பிரிந்து தேயிலை தோட்டத்தில் தவித்த கடமான் மீட்பு
தாயை பிரிந்து தேயிலை தோட்டத்தில் தவித்த கடமான் மீட்பு
ஊட்டி
மஞ்சூரை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தை, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட பாக்கோரை கிராமம் அருகே தேயிலை தோட்டத்தில் கடமான் ஒன்று எழுந்திருக்க முடியாமல், அங்கேயே படுத்து இருந்தது. இதுகுறித்து தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
அப்போது 1½ வயது உள்ள கடமான் தாயை பிரிந்ததால் தேயிலை தோட்டத்திலேயே இருந்ததும், கடமான்கள் கூட்டத்தோடு சேராமல் தனியாக பிரிந்ததும் தெரியவந்தது.
மேலும் உடலில் காயம் இல்லை. இதையடுத்து வனத்துறையினர் கடமானை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். பின்னர் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
Related Tags :
Next Story