மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி ‘போக்சோ’ சட்டத்தில் கொத்தனார் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி ‘போக்சோ’ சட்டத்தில் கொத்தனார் கைது
x
தினத்தந்தி 10 Oct 2021 9:12 PM IST (Updated: 10 Oct 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கொத்தனாரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கொத்தனாரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

கொத்தனார்

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை சிவசக்தி நகரை சேர்ந்த வீரமுத்து மகன் கார்த்திக் (வயது33). கொத்தனார். இவர் 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி ஒருவரிடம் பழகி வந்தார். சம்பவத்தன்று அந்த சிறுமி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்றனர். அதற்குள் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

‘போக்சோ’ சட்டத்தில் கைது

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Next Story