தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Oct 2021 10:08 PM IST (Updated: 10 Oct 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா பெட்டியில் வெளிவந்துள்ள செய்திகள் வருமாறு:-

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் சாலையில் விளமல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலைகளில் தினமும் இரவு நேரங்களில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.குறிப்பாக கூட்டமாக சுற்றித்திரியும் மாடுகள் திடீரென சண்டையிட்டு கொண்டு சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுகின்றன.. எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                                                        -சரவணன், விளமல்.

நாய்கள் தொல்லை
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்து திருவாஞ்சியம் கிராமத்தில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை கடித்து விடுகின்றனர்.மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகிறது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது.எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யூசுப், திருவாஞ்சியம்.

மாற்று இடம் வழங்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா பகுதியில் மூவர்க்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்ததால் அங்குள்ள சாலைகளில் கொட்டப்பட்டு காய வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நெல்லை காய வைக்க பொக்லின் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு நெல் காய வைக்க மாற்று இடம் கொடுக்கவும், நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                                                                                                                                              -ஆகாஷ், திருவாரூர்.

குண்டும், குழியுமான சாலை

திருவாரூர் புதிய பஸ் நிலையத்துக்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன.இதன் காரணமாக பஸ் நிலையத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருவாரூர் பஸ் நிலையத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக பராமரிப்பின்றி கிடக்கின்றன. இதானல் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர் பஸ் நிலையத்தில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
  
                                                                                                                                    சேதுபதி, திருவாரூர்.

போக்குவரத்துக்கு இடையூறாக மரக்கிளைகள்
மயிலாடுதுறை மாவட்டம், இளையாளூர் ஊராட்சி வடகரையில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. இதனால் சாலையின் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.மேலும், கனரக வாகனங்கள் சாலையில் செல்லமுடியாதபடி மரக்கிளைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன.அதுமட்டுமின்றி சாலையில் விபத்துகளை ஏற்படுத்துவகையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. எனவே, உயிர்பலி ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்றவும், மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                                                                                                                                 -ஹாஜாஷரீப், அறங்கக்குடி.

Next Story