ஓசூரில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது செல்போன்கள் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
ஓசூரில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குட்டி என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சூர்யா நகரை சேர்ந்த குட்டி (வயது 40), அத்திப்பள்ளி பாபுஜான் (41), பெஸ்மனஅள்ளி தேவராஜ் (40), சித்தநாயக்கனஅள்ளி சுனில் (22), நாராயணசாமி (40), மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முனியப்பா என்கிற சிட்டி (47), பாரதி நகர் கிரண் (26), பல்லூர் முனிராஜ் (44), ஆதிகொண்டப்பள்ளி சந்தோஷ் (30), அத்திப்பள்ளி பாஸ்கர் (28), எப்பகோடி சிட்டிபாபு (46), அத்திப்பள்ளி முருகேஷ் (41), நெல்லூர் பில்லப்பா (40), பெங்களூரு ராஜூ (43), தின்னூர் நாகராஜ் (32), ஒன்னல்வாடி சேகர் (38) ஆகிய 16 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 600 மற்றும் 16 செல்போன்கள், 3 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story