ஒரே நாளில் 40,409 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 40,409 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 10 Oct 2021 11:26 PM IST (Updated: 10 Oct 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 40,409 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 40,409 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாபெரும் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 5-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட், பஜார், சினிமா தியேட்டர்கள் உள்பட 1,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

வேலூர் ஓட்டேரியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார். முகாமில் தடுப்பூசி 2-வது டோஸ் போட்ட பெண்களுக்கு சேலை உள்ளிட்ட சிறப்பு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

கலெக்டர், இணை இயக்குனர் ஆய்வு

தொடர்ந்து கலெக்டர், வேலூர் விருப்பாட்சிபுரம், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வின் போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாநகர நல அலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர்கள் மதிவாணன், வெங்கடேசன், வேலூர் தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் வள்ளிமலையில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஆரம்ப சுகாதார நிலைய இணை இயக்குனர் சுரேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி உடனிருந்தார்.
40,409 பேருக்கு தடுப்பூசி

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போடும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக வாஷிங்மிஷின் மற்றும் கியாஸ் ஸ்டவ், மிக்சி, ஸ்மார்ட் போன், தங்க நாணயம் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதனால் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு கொண்டனர். அவர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்பட்டது.

அந்த டோக்கனில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் பெயர், செல்போன் எண்கள் எழுதி பெறப்பட்டது. மண்டலம் வாரியாக டோக்கன்கள் குலுக்கல் இன்று (திங்கட்கிழமை) கலெக்டர் முன்னிலையில் நடைபெற உள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் 1,000 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 40,409 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story