கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர் வீட்டில் நகை பணம் திருட்டு


கள்ளக்குறிச்சியில்  அரசு ஊழியர் வீட்டில் நகை பணம் திருட்டு
x
தினத்தந்தி 10 Oct 2021 11:29 PM IST (Updated: 10 Oct 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர் வீட்டில் நகை பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 43). இவர் கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.  தேர்தல் பணியின் காரணமாக குமார் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி மேல் வீ்ட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் கீழ்வீட்டில் படுத்து உறங்கினார். 

பின்னர் நேற்று காலையில் மேல் வீட்டை சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசு, ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இரவு நேரத்தில் யாரோ மர்மநபர்கள் வீ்ட்டின் பூட்டை உடைத்து மேற்கண்ட நகை மற்றும் பணத்தை திருடிச்சென்று விட்டனர். திருடுபோன நகை-பணத்தின் மதிப்பு ரூ.1¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story