மேலும் 91 பேருக்கு தொற்று


மேலும் 91 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 10 Oct 2021 11:36 PM IST (Updated: 10 Oct 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

மேலும் 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று குறைந்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 820-ஆக உள்ளது.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 86 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 92 ஆயிரத்து 39-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 819 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு நேற்று பலி இல்லை என்பதால் பலி எண்ணிக்கை 962-ஆக உள்ளது. 

Next Story