மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Oct 2021 11:41 PM IST (Updated: 10 Oct 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

நொய்யல், 
நொய்யல் அருகே பூங்கோடை காளிபாளையத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 60). இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு நடந்து செல்வதற்காக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவர் நகர் விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த மோகனசுந்தரத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story