திருமண மண்டபத்தில் தீ விபத்து
வத்திராயிருப்பு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
தீ விபத்து
வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் பஸ் ஸ்டாப் அருகே உள்ளது. இந்த மண்டபத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பழைய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சேமித்து வைத்து வருகிறது.
இந்த திருமண மண்டபத்தில் நேற்று பகல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் மண்டபத்தின் உள்ளே உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், பழைய பொருட்கள் அனைத்து எரிந்து சேதமானது.
பரபரப்பு
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மண்டபத்தில் பற்றிய தீயினை அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாழடைந்த திருமண மண்டபத்தில் தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story