2 கைதிகள் தப்பி ஓட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் திடீரென போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர். விடிய, விடிய நடந்த தேடுதலுக்கு பின்னர் ஒருவர் பிடிபட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் திடீரென போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர். விடிய, விடிய நடந்த தேடுதலுக்கு பின்னர் ஒருவர் பிடிபட்டார்.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி - வத்திராயிருப்பு சாலையில் உள்ள கொடமுருட்டி பாலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். போலீசார் அந்த ேமாட்டார்சைக்கிளை நிறுத்துமாறு கூறினர். அப்போது அவர்கள் நிறுத்தாமல் செல்ல முயன்ற போது, கொடமுருட்டி பாலத்தில் மோதி கீழே விழுந்தனர். அப்போது அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் கீேழ விழுந்தது.
2 பேர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்ததுடன், மோட்டார்சைக்கிள், வாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது கூமாபட்டி ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது24), அருண் குமார் (19) என்பது தெரியவந்தது.
இதில் முத்துக்குமார் மீது கத்தியை காட்டி மிரட்டிய வழக்கு உள்ளதும் தெரியவந்தது. ஆயுதம் ைவத்திருந்தது தொடர்பாக அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓட்டம்
பின்னர் அவர்கள் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அழைத்து வந்தனர். வரும்வழியில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் கைதிகள் 2 பேரும் திடீரென தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கூமாபட்டி போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
ஒருவர் சிக்கினார்
அழகாபுரி சோதனைச்சாவடி மற்றும் முக்கிய இடங்களில் தொடர் கண்காணிப்பிலும், ேசாதனையிலும் போலீசார் விடிய, விடிய ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று அச்சங்குளம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். அருண்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story