விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 11 Oct 2021 1:13 AM IST (Updated: 11 Oct 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காரியாபட்டி, 
 காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் தலைமை வகித்தார். காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் முன்னிலை வகித்தார். பேரணியை செயல் அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிவழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் முடிக்கப்பட்டது. பேரணியில் சுகாதார ஆய்வாளர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் காசிமாயன், தூய்மை மேற்பார்வையாளர் ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story