மாவட்ட செய்திகள்

அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் + "||" + Rajarajeswari decoration for Goddess

அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்

அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்
அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி வழிபாடு நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட உற்சவ தெய்வங்களுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விசாலாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோலத்தில் காட்சி தந்தார். ராஜராஜேஸ்வரி அஸ்ட்டோத்ரம், அம்பாள் அஸ்ட்டோத்ரம், அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் எழுந்தருளி சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்பட்டு, பஞ்ச ஆரத்தி நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. நவராத்திரி கொண்டாட்டம்: கொரோனா கவச உடை அணிந்து நடனமாடிய பெண்கள்
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா கவச உடை அணிந்து இளம் பெண்கள் நடனமாடினர்.
2. நவராத்திரி அலங்காரம்
நவராத்திரி அலங்காரம்
3. நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு
நவராத்திரி விழாவையொட்டி கொலு வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
4. நவராத்திரியும்.. வழிபாடும்..
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் தொடங்கி ஒன்பது நாட்கள் ‘நவராத்திரி’ தினங்களாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது தினங்களிலும், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபாடு செய்ய வேண்டும்.