கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது
கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது.
பெங்களூரு:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.110-ஐ நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் கியாஸ் சிலிண்டர்களின் விலையும் ரூ.900-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தது.
இதனால் டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்கிய வண்ணம் இருந்தது. இந்த நிலையில், பெட்ரோலை தொடர்ந்து, கர்நாடகத்தில் டீசல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டி இருக்கிறது.
அதன்படி, உத்தரகன்னடா மாவட்டத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.12 காசுகளாகவும், பல்லாரி மற்றும் விஜயநகர் மாவட்டங்களில் ரூ.100.03 காசுகளாகவும் உள்ளது. கர்நாடகத்தில் தற்போது 3 மாவட்டங்களில் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி இருக்கிறது. கூடிய விரைவில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது.
Related Tags :
Next Story