ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்


ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 11 Oct 2021 3:53 AM IST (Updated: 11 Oct 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஏற்காடு:
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஏழைகளின் ஊட்டி
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். அவர்கள் லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
படகு சவாரி
நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதுடன் அங்கு இதமான சூழ்நிலை காணப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் ஏற்காட்டில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story