ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக செம்மண் சாலை சீரமைப்பு


ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக செம்மண் சாலை சீரமைப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 8:49 PM IST (Updated: 11 Oct 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக செம்மண் சாலை சீரமைக்கப்பட்டது. இதனை அடுத்து கனரக வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ரூ.28 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணிகள் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டன. இந்தநிலையில், பாலப்பணிகள் நடைபெற்று வரும் இடதுபுறத்தில் வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிக செம்மன் சாலை அமைக்கப்பட்டது.

இதன் வழியாகத்தான் தற்போது ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடிக்கடி பெய்து வரும் பலத்த மழையால் ஆந்திராவில் உள்ள நந்தனம் காட்டுப் பகுதியில் உள்ள ஓடைகளிலிருந்து பாய்ந்து வந்த தண்ணீரால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

செம்மண் சாலை சீரமைப்பு

இதனால் ஊத்துக்கோட்டை தரைப்பாலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட செம்மண் சாலையில் இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், புதிதாக கட்டி வரும் மேம்பாலத்தின் மீது கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செம்மண் சாலையை நேற்று சீர் செய்தனர். இதனையடுத்து பஸ், லாரி போன்ற கனரக வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.


Next Story