புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் மவுன விரதம்
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து புதுவையில் காங்கிரசார் மவுன விரத போராட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி, அக்.
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து புதுவையில் காங்கிரசார் மவுன விரத போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகள் போராட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய மந்திரியின் மகன் வந்த கார் புகுந்ததாலும் இதைத்தொடர்ந்து நடந்த வன்முறையிலும் விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு காரணமான பா.ஜ.க. மற்றும் உத்தரபிரதேச அரசினை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மவுனவிரதம்
புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மவுனவிரத போராட்டம் நடந்தது. சுதேசி மில் அருகே நடந்த இந்த போராட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், அனந்தராமன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், ஐ.என்.டி.யு.சி. தலைவர் பாலாஜி, மற்றும் நிர்வாகிகள் தனுசு, இளையராஜா, வக்கீல் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story