ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வேட்பாளர்கள், முற்றுகை


ஆலங்காயம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வேட்பாளர்கள், முற்றுகை
x
தினத்தந்தி 11 Oct 2021 10:17 PM IST (Updated: 11 Oct 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வேட்பாளர்கள், ஏஜெண்டுக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வேட்பாளர்கள், ஏஜெண்டுக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அனுமதி சீட்டு

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 9-ந்் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஆலங்காயம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் பணிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
 
காலை 8 மணி முதலே ஏராளமானோர் அனுமதி சீட்டு பெறுவதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். அவர்களை பல மணி நேரமாக காத்திருந்தும் முறையாக அனுமதிச் சீட்டுகளை  வழங்காமலும், வேண்டிய நபர்களுக்கும், ஆளும் கட்சி பிரமுகர்களுக்கும் அலுவலக பகுதிக்குள் அழைத்து அவர்களுக்கு தேவையான அனுமதி சீட்டுகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் முற்றுகை

இதனால் சுயேச்சை மற்றும் இதர கட்சியினரும் ஆத்திரமடைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி உடனடியாக அனுமதி சீட்டு வழங்கிவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதே போல் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மறு தேர்தல் நடத்தக் கோரியும், தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமையில் மநு கொடுக்கவந்தனர். தேர்தல் அதிகாரி மனுவை வாங்க மறுத்ததால் அவர்கள் ஒன்றிய தேர்தல்  நடத்தும் அலுவலர் (பொறுப்பு) சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிகாரி மனுவை பெற்றுக் கொண்டார்.

Next Story