வாக்கு எண்ணும் மையத்திற்குள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி கிடையாது


வாக்கு எண்ணும் மையத்திற்குள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி கிடையாது
x
தினத்தந்தி 11 Oct 2021 10:26 PM IST (Updated: 11 Oct 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி கிடையாது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை 6 மையங்களில் இன்று (செவ்வாய்கிழமை) நடக்கிறது. வாக்கு எண்ணும் அலுவலர்கள். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் செல்போன் கொண்டுவர அனுமதி கிடையாது. மாவட்ட தேர்தல் பார்வையாளர், மாவட்ட கலெக்டர், தேர்தல் அலுவலர்கள், ஒன்றிய தேர்தல் பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை நடத்தும் நுண் பார்வையாளர்கள் மட்டுமே வாக்கு எண்ணுகை மையத்திற்குள் செல்போன் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாத நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வாக்கு எண்ணும் மைய நுழைவுவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கோடுகள் வரையப்பட்டிருக்கும். இந்த கோட்டிற்கு உள்ளே பொதுமக்கள், அரசியல் கட்சியினர்  அனுமதிக்கப்படமாட்டார்கள். வாக்கு எண்ணுகை சுமுகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Next Story