சரணாலயத்துக்கு வந்து குவியும் இலங்கை கடல் காகங்கள்
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு இலங்கையில் இருந்து கடல் காகங்கள் வந்து குவிந்து வருகின்றன.
வேதாரண்யம்:
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு இலங்கையில் இருந்து கடல் காகங்கள் வந்து குவிந்து வருகின்றன.
பறவைகள் சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து தங்கி விட்டு செல்லும். அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் கடும் குளிரின் காரணமாக பறவைகள் கோடியக்கரை சரணாலயத்துக்கு வந்து செல்கின்றன.
கோடியக்கரை பகுதியில் மழை பெய்ய தொடங்கி இருப்பதால் ரஷியா, ஈரான், ஈராக், சைபீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியுள்ளன.
இலங்கை கடல் காகம்
தற்போது கோடியக்கரை சரணாலயத்துக்கு இலங்கையில் இருந்து கடல் காகம் கூட்டம், கூட்டமாக வந்து குவிந்து வருகின்றன. இந்த பறவைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். வெளிநாட்டு பறவைகளை காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் காணலாம் என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.
Related Tags :
Next Story