திருவாரூர் அருகே பரிதாபம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி சாவு


திருவாரூர் அருகே பரிதாபம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 11 Oct 2021 10:29 PM IST (Updated: 11 Oct 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே வீட்டின் முன்பக்க மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

திருவாரூர்:-

திருவாரூர் அருகே வீட்டின் முன்பக்க மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

திருவாரூர் அருகே உள்ள பிலாவடிமூளை பகுதியை சேர்ந்தவர் கிளியம்மாள் (வயது65). இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் கூலி தொழிலாளர்கள். கிளியம்மாள், கொடிக்கால்பாளையம் பகுதியில் வசிக்கும் முகமது இக்பால் என்பவருடைய வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அவருடைய வீட்டுக்கு வேலை செய்வதற்காக கிளியம்மாள் சென்றார்.
அப்போது வீட்டின் அழைப்பு மணியை அடித்து விட்டு வாசலில் காத்திருந்தபோது வீட்டின் முன்பக்க மேற்கூரை திடீரென இடிந்து கிளியம்மாள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் கிளியம்மாள் சிக்கி கொண்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த முகமது இக்பால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
 
சாவு

தகவலின் பேரில் அவர்கள் வந்து பார்த்த போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கிளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவாரூர் டவுன் போலீசார் கிளியம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் முன்பக்க மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story