செய்யாறில் ரேஷன் பொருள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
செய்யாறில் ரேஷன் பொருள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
செய்யாறு
செய்யாறு டவுன் காந்தி சாலையில் கற்பகம் கூட்டுறவு அங்காடியின் 2 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் கடை எண்:1-ல் விற்பனையாளராக பாலகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் போதையில் பணிக்கு வருவதாகவும், கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேற்று வழக்கம்போல் ரேஷன் பொருள் வாங்க பொதுமக்கள் கடைக்கு சென்றபோது விற்பனையாளர் பாலகிருஷ்ணன் குடிபோதையில் இருந்ததாகவும், பொதுமக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விற்பனையாளரை கண்டித்து திடீரென ரேஷன் கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மேலாளர் கணேசன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விற்பனையாளர் பாலகிருஷ்ணன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து கடை எண்:2 விற்பனையாளர் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story