புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Oct 2021 11:29 PM IST (Updated: 11 Oct 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

கூடுதல் விலைக்கு விற்கப்படும் முத்திரைத்தாள்கள்

வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் முத்திரைத்தாள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனையாளர்கள் பத்து ரூபாய் முத்திரைத்தாளை ரூ.20-க்கும், இருபது ரூபாய் முத்திரைத்தாளை ரூ.30-க்கும், நூறு ரூபாய் முத்திரைத்தாளை ரூ.110-க்கும் எனக் கூடுதலாக விற்பனை செய்கிறார்கள். மேலும் ஒருசில அலுவலகத்தில் விற்போரும், வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வோரும் ரூ.10 கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முரளி, வேலூர்.

நீர்வரத்து கால்வாயை தூர்வார வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆனால் செய்யாறு தாலுகா பாப்பாந்தாங்கல் மதுரா கிராமத்தில் உள்ள குளத்துக்கு மட்டும் தண்ணீர் வரவில்லை. அந்தக் குளத்துக்கு வரும் நீர்வரத்துக் கால்வாயை தூர்வார மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-அன்பு, பாப்பாந்தாங்கல். 
வேகத்தடைக்கு வெள்ளைநிறம் பூச வேண்டும்

வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் அருகில் 4 வேகத்தடைகள் உள்ளன. அந்த வேகத்தடைகள் உள்ளதை தொலைவில் இருந்து உணரும் வகையில் அதன் மீது வெள்ளைநிறம் பூசாமல் உள்ளனர். இதனால் பகல் நேரத்திலேயே வேகத்தடை இருப்பதை உணராமல் பலர் விபத்தில் சிக்குகிறார்கள். வேகத்தடைக்கு வெள்ளைநிறம் பூசுமாறு நெடுஞ்சாலைத்துறையை கேட்டுக்கொள்கிறோம்.

-ராதாகிருஷ்ணன், வளையாம்பட்டு.


Next Story