மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி + "||" + Try to put out the fire

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு 5 குழந்தைகளுடன், 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி 
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும்  கூட்டம் நடந்தது. இதில் மனு கொடுக்க வந்த 2 பெண்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தங்கள் மீதும், தங்களின் 5 குழந்தைகளின் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றினார்கள். தொடர்ந்து  போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் ஓசூர் சீதாராம் நகர் பகுதியை சேர்ந்த குல்நாஸ் (வயது 36), உபீனா (27) என்று தெரிய வந்தது.
அவர்கள் ஓசூர் சானசந்திரத்தை சேர்ந்த கயல்விழி என்பவரிடம் சீட்டு போட்டு கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு பணத்தை தராமல் இழுத்தடிப்பதாகவும், அதனால் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாகவும் கூறினார்கள்.
ஏற்கனவே தீக்குளிக்க முயன்றவர் 
சீட்டு நடத்திய கயல்விழி தன்னிடம் சீட்டு எடுத்தவர்கள் தனக்கு பணம் தரவில்லை என்று கூறி கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவர் ஆவார். இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரிப்பதாக கூறினார்கள். 5 குழந்தைகளுடன், 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. டி.ஜி.பி. அலுவலகம் அருகே தீக்குளிக்க முயற்சி
சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே திடீரென தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில், மகளை கண்டுபிடித்து தரக்கோரி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
5. தீக்குளிக்க முயன்ற பட்டாசு தொழிலாளி
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி தனது குடும்பத்தினர் முன்னிலையில் தீக்குளிக்க முயன்றார்.