அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவர்கள்


அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவர்கள்
x
தினத்தந்தி 12 Oct 2021 12:06 AM IST (Updated: 12 Oct 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்சை மாணவர்கள் சிறைபிடித்தனர்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு பகுதியில் செல்லும் அரசு பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என்றும் பஸ் சரியான நேரத்தில் வராததால் அங்கிருந்து பாளையங்கோட்டை பகுதிக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று மணப்படை வீடு பகுதிக்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

உடனே பஸ் டிரைவர், கண்டக்டர் பஸ்சை சிறைபிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். 

Next Story