மாவட்ட செய்திகள்

பணம் திருடிய வாலிபர் கைது + "||" + Youth arrested for stealing money

பணம் திருடிய வாலிபர் கைது

பணம் திருடிய வாலிபர் கைது
பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:

நெல்லை டக்கரம்மாள்புரத்தை சேர்ந்தவர் ஆழ்வார். இவர் சம்பவத்தன்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.400 திருடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது அதில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், ஆஸ்பத்திரி வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் செய்துங்கநல்லூரை சேர்ந்த அகமதுகனி மகன் தமீம் அன்சாரி (வயது 26) என்பதும், மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமீம்அன்சாரியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
காரியாபட்டியில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கோவிலில் பீரோவை உடைத்து பணம் திருட்டு
ஏர்வாடி அருகே கோவிலில் பீரோவை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
3. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. கோவில் உண்டியல் பணம் திருட்டு
திருமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
5. உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நடிகர் வடிவேலு குலதெய்வ கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு