மருதுபாண்டியர் நினைவிடத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
மருதுபாண்டியர் நினைவிடத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார்.
திருப்பத்தூர்,
வருகிற 24-ந்தேதி மருதுபாண்டியர்களின் 220-வது நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் திருப்பத்தூரில் உள்ள நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையடுத்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நினைவு ஸ்தூபி, தாலுகா அலுவலகம் அருகில் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மணி மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வந்து செல்லும் வழித்தடம், போக்குவரத்து மாற்றம், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் நேரம், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை போலீசாருடன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன், இன்ஸ்பெக்டர் சேது, சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story