மாவட்ட செய்திகள்

தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 44 நிறுவனங்களுக்கு அபராதம் + "||" + Fines for 44 companies

தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 44 நிறுவனங்களுக்கு அபராதம்

தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 44 நிறுவனங்களுக்கு அபராதம்
காந்தி ஜெயந்தியையொட்டி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 44 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரூர்,
கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
காந்தி ஜெயந்தியன்று கரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மூலம் விடுமுறை, மாற்று விடுப்பு, ஊதிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. அதில் 14 கடைகள், 27 உணவு நிறுவனங்கள், 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 44 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நிறுவனங்களுக்கு தேசிய பண்டிகை சிறப்பு விடுமுறை சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பணி மேற்கொண்டால் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது சம்பளத்துடன் கூடிய விடுப்போ அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.