மாவட்ட செய்திகள்

டிராக்டர் கலப்பையில் சிக்கி சிறுவன் பலி + "||" + tractor plow kills

டிராக்டர் கலப்பையில் சிக்கி சிறுவன் பலி

டிராக்டர் கலப்பையில் சிக்கி சிறுவன் பலி
நிலத்தை உழுதபோது டிராக்டர் கலப்பையில் சிக்கி சிறுவன் பலியானான்.
தோகைமலை, 
டிராக்டர் மீது அமர ஆசை
தாந்தோன்றி மலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் ரியாஸ் (வயது 10). இவன், தோகைமலை கொசூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பைமேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனது தாத்தா மணிவேல் வீட்டில் சிறுவயது முதல் வசித்து வந்துள்ளான். மேலும், அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பயிர் செய்வதற்காக டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ரியாஸ், டிராக்டர் மீது அமர ஆசைப்பட்டதாக தெரிகிறது.
சிறுவன் பலி
இதையடுத்து டிராக்டரை ஓட்டிய டிரைவர் ரியாஸை டிராக்டர் மீது அமர வைத்து உள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால் தவறி விழுந்த ரியாஸ், டிராக்டர் கலப்பையின் இடையே சிக்கி கொண்டான். இதில், பலத்த காயம் அடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிேலயே ரியாஸ் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.