மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத முதியவர் பிணம் + "||" + The corpse of an old man

அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
தளவாய்புரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டது.
தளவாய்புரம், 
தளவாய்புரம் அருகே கிருஷ்ணாபுரம் அருந்ததியர் காலனி எதிரே அயன் கொல்லங்கொண்டான் கண்மாய் பகுதி உள்ளது. இந்த கண்மாயில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் ஒன்று கிடந்தது. இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் அந்த உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. காயங்களுடன் முதியவர் பிணம்
அருப்புக்கோட்டை அருகே காயங்களுடன் முதியவர் பிணம் மீட்கப்பட்டது.