8,011 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 8,011 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், சொக்கலிங்கபுரம் புளியம்பட்டி, வெள்ளக்கோட்டை உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் பாளையம்பட்டி, மலைப்பட்டி, குறிஞ்சாங்குளம், புலியூரான், தொட்டியங்குளம், பந்தல்குடி, கொப்புசித்தம்பட்டி உள்பட 62 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 8,011 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், தாசில்தார் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டி, நகர் நல மையம் மருத்துவர் கோமதி, மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டியன், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story