மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கபடி போட்டி + "||" + Kabaddi competition

மாநில அளவிலான கபடி போட்டி

மாநில அளவிலான கபடி போட்டி
தாயில்பட்டி அருகே மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் ஊராட்சியை சேர்ந்த பூசாரி நாயக்கன்பட்டியில் வடகாசி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் சேலம், கரூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவடங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.  இறுதிப்போட்டியில் ஜமீன் கோடங்கிபட்டி சேர்ந்த சக்காதேவி அணியும், பூசாரிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுக்லா அணியும் மோதின. இதில் ஜமீன் கோடங்கிபட்டி சேர்ந்த சக்காதேவி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமோகன், ஊர் தலைவர் சக்கையா ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.