மாவட்ட செய்திகள்

உருட்டுக்கட்டையால் தாக்கி மனைவி கொலை; கணவர் கைது + "||" + Wife beaten to death by rolling pin; Husband arrested

உருட்டுக்கட்டையால் தாக்கி மனைவி கொலை; கணவர் கைது

உருட்டுக்கட்டையால் தாக்கி மனைவி கொலை; கணவர் கைது
உருட்டுக்கட்டையால் தாக்கி மனைவி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:

உருட்டுக்கட்டையால் தாக்கினார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 37). இவரது மனைவி புஷ்பா(27). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புஷ்பா செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த சுரேஷ் சந்தேகப்பட்டு, யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு புஷ்பாவை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் புஷ்பா படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கைது
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த வி.களத்தூர் போலீசார், சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றில் தள்ளி 4 வயது மகள் கொலை; தாயும் தற்கொலை
டி.என்.பாளையத்தில் கிணற்றில் 4 வயது மகளை தள்ளி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது
அந்தியூர் அருகே பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் கொன்றதாக போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
3. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு: சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் பரபரப்பு சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருப்பதாக கல்லூரி மாணவர் கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.
4. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்தது அம்பலமானது.
5. சங்கராபுரம் அருகே பரபரப்பு கடனை திருப்பி கொடுக்காததால் டிரைவர் அடித்து கொலை
சங்கராபுரம் அருகே கடனை திருப்பி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது