மாவட்ட செய்திகள்

பஸ் - கிரேன் மோதல்; 6 பேர் காயம் + "||" + Injury

பஸ் - கிரேன் மோதல்; 6 பேர் காயம்

பஸ் - கிரேன் மோதல்; 6 பேர் காயம்
ராஜபாளையத்தில் பஸ் - கிரேன் மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.
ராஜபாளையம். 
ராஜபாளையத்தில் பஸ் - கிரேன் மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். 
விபத்து 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சிவகாசி, சாத்தூர் வழியாக கோவில்பட்டி செல்லும் தனியார் பஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
 பஸ்சை முதுகுடியை சேர்ந்த திருப்பதி என்பவர் ஓட்டினார். இந்தநிலையில்  ராஜபாளையம் அருகே எம்.பி.கே புதுப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த கிரேன் வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது. 
6 பேர் காயம் 
இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி முழுமையாகவும், பின்பக்க கண்ணாடிகளும் சேதமானது. இந்த விபத்தில் டிரைவர் திருப்பதி உள்பட 6  பயணிகள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.
பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். காயம் அடைந்த பஸ் டிரைவர் திருப்பதிக்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தென்காசி மாவட்டம், வீரசிகாமணியை சேர்ந்த கிரேன் வாகன டிரைவர் கணேசனிடம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு பஸ்-வேன் மோதல்; 21 பேர் படுகாயம்
திருச்சி அருகே கன்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது, வேன் மீது அரசு பஸ் மோதியதில் வேனில் இருந்த 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்
விருதுநகரில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
3. பாலத்தின் மீது கார் மோதியது
வத்திராயிருப்பு அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. கார் மோதி 2 பேர் படுகாயம்
கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் படுகாயம்
திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.