மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு + "||" + Police protection

வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு
காரியாபட்டி அருகே வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காரியாபட்டி, 
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அழகியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு சீட்டு பெட்டிகள் காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிவகுமார் மற்றும் யூனியன் அலுவலக அலுவலர்கள் செய்து வருகின்றனர். வாக்குகள் எண்ணப்படும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோன்று நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் என்.முக்குளம், உழுத்தி மடை ஆகிய ஊராட்சி மன்ற தலைவருக்கு தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணும் பணி நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் போராட்டம் எதிரொலி: 4 மாவட்ட போலீசார் குவிப்பு
நெல்லையில் போராட்டம் நடந்ததன் எதிரொலியாக பாதுகாப்புக்காக 4 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.