வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்கக்கோரி பெண் மனு
வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்கக்கோரி பெண் மனு
ராமநாதபுரம்
திருவாடானை அருகே உள்ள முள்ளிமுனை பகுதியை சேர்ந்தவர் ராமர் என்பவரின் மனைவி கலைநிவேதியா (வயது 32). 7 மாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 2 மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ராமர் கடந்த 13 வருடங்களாக சவுதி அரேபியா நாட்டிற்கு மீன்பிடி தொழில் செய்து வந்தார். 6 மாதங்களுக்கு ஒரு முறை விடுமுறையில் ஊருக்கு வருவார். இந்தநிலையில் கடந்த மாதம் 4-ந் தேதி அவர் இறந்து விட்டார் என்று தகவல் தெரிவித்துள்ளனர். அவருக்கு என்ன ஆனது எப்படி இறந்தார் என தெரியவில்லை. எனது கணவரின் உடலை கொண்டவரக்கோரி கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்ைல. தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மத்திய அரசு மூலம் எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரின் இறப்பு செய்தி கேட்டது முதல் நானும் எனது குடும்பத்தினரும் மனவேதனையில் இருந்து வருகிறோம். வயிற்றில் குழந்தையுடனும், 2 கைக்குழந்தைகளுடனும் தவித்து வரும் எனக்கு எனது கணவரின் உடலை மீட்டு கொண்டு வருவதோடு அரசு நிவாரண நிதியும் வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story