ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு-போக்குவரத்து பாதிப்பு
ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்காட்டில் மழை
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு சுமார் 7 மணி முதல் மலைப்பாதையில் ஏற்காடு- சேலம் செல்லும் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்காட்டில் இருந்து சேலம் சென்றவர்களும், சேலத்தில் இருந்து ஏற்காடு சென்றவர்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனே துரித நடவடிக்கையில் இறங்கினர். அதாவது பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் சரிந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினர். அப்படி இருந்தும் இரவு வரை மண்சரிவு சரிசெய்யப்படவில்லை.
மாற்றுப்பாதை
சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மண் சரிவை அப்புறப்படுத்தும் வரை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
சரிந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்த நீண்டநேரம் ஆனதால், போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர். அதாவது குப்பனூர் செல்லும் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இந்த திடீர் மண்சரிவால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் மக்களும் கடும் அவதிக்குள்ளாயினர்.
Related Tags :
Next Story