விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2021 3:46 AM IST (Updated: 12 Oct 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் 
ராமநாதபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலாடி தாலுகா டி.மாரியூர் ஊராட்சி மடத்தாகுளம் பொது கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உப்பளம் அமைப்பதை தடுக்க கோரியும் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் விடுதலை சேகர் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் கனியமுதன் கண்டன உரையாற்றினார். இதில்பாராளுமன்ற செயலாளர் கோவிந்தராஜ், தொகுதி செயலாளர் பழனிக்குமார், கிட்டு, சத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story