திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு செத்த அதிர்ச்சியில் விவசாயி சாவு


திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு செத்த அதிர்ச்சியில் விவசாயி சாவு
x
தினத்தந்தி 12 Oct 2021 2:07 PM IST (Updated: 12 Oct 2021 2:07 PM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே இடி தாக்கி பசுமாடு செத்த அதிர்ச்சியில் அருகில் நின்ற பலராமனுக்கு அதிர்ச்சியில் மூச்சுத்திணறலும் மயக்கமும் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த தத்தனூர் கிராமம் கொல்லை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி பலராமன் (வயது 55). இவர் நேற்று தனது பசு மாட்டை அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

பிற்பகல் 4 மணியளவில் இந்த பகுதியில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. எனவே மேய்ச்சலுக்கு விட்டிருந்த தனது பசு மாட்டை வீட்டுக்கு கொண்டுவர அவர் அங்கு சென்றார். அப்போது திடீரென இடி விழுந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

அருகில் நின்ற பலராமனுக்கு அதிர்ச்சியில் மூச்சுத்திணறலும் மயக்கமும் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையறிந்து அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு 108 அவசர ஊர்தி வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.


Next Story