கயத்தாறை சேர்ந்த 2 வாலிபர்கள் நீண்ட அலகு குத்தி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு நேர்த்திசை செலுத்தி ஊர்வலம்
கயத்தாறை சேர்ந்த 2 வாலிபர்கள் நீண்ட அலகு குத்தி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு நேர்த்திசை செலுத்தி ஊர்வலம் சென்றனர்
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தில் அம்பிகை மாரியம்மன், மயானகாளி கோவில் முன்பு தசரா குழுவினர் தினமும் காலை மாலை சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். நேற்று காலை 10 மணிக்கு குலசேகரப்பட்டனம் கோவிலுக்கு செல்வதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிவா என்ற வாலிபர் 35 அடி நீளமுள்ள வேலை அலகு குத்தியும், கவுதம் என்ற வாலிபர் 15 அடி நீளமுள்ள வேலை அலகு குத்தியும் முத்தாரம்மனுக்கு நேர்த்திசை செலுத்தி கோவில் முன்பு ஆடினர். பின்னர் அவர்கள் கோவிலை வலம் வந்து, கயத்தாறு வீதியில் வழிநெடுகிலும் ஆடி ஊர்வலமாக சென்றனர்.
Related Tags :
Next Story