விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2021 5:00 PM IST (Updated: 12 Oct 2021 5:00 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்
மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மத்திய அரசை கண்டித்து தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ. காளிமுத்து தலைமை தாங்கினார். 
இதில்பொது செயலாளர் சுப்பிரமணியம், ஆறுமுகம் மாவட்ட தலைவர் கதிர்வேல், செயலாளர் வேலுசாமி, துணைத் தலைவர் சிவகுமார் உள்பட 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story