முத்திரை தாள் விற்பனை நிறுத்தம்
முத்திரை தாள் விற்பனை நிறுத்தம்
தாராபுரம்
தாராபுரம் சார்நிலை கருவூலகத்தில் முத்திரைத்தாள் விற்பனை இல்லாததால் வக்கீல்கள் அவதியடைந்து வருகிறார்கள.
முத்திரைத்தாள்
தாராபுரத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்படும் வழக்குக்கு தகுந்தாற் போல நீதிமன்ற முத்திரை தாள் கட்டணம் செலுத்த வேண்டும். நீதிமன்ற முத்திரைத்தாள் தாராபுரம் சார்நிலை கருவூலகத்தில் பொதுமக்கள் கேட்டால் விற்பது இல்லை என கருவூல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாராபுரம் சார்நிலை கருவூலகத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய முத்திரைத்தாள் 3 ஆண்டு காலமாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்ற முத்திரைத்தாள் வேண்டும் என்று அரசிடம் கருவூல அதிகாரிகள் கோரவேண்டும்.
இதுகுறித்து வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது
தாராபுரம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்காக வாதாடி வருகின்றனர். அவ்வாறு வாதாடுவதற்கு தேவையான நீதிமன்ற முத்திரைத்தாள் வழக்கிற்கு ஏற்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அப்போதுதான் வழக்கு நடைமுறைக்கு வரும்.
இந்நிலையில் தாராபுரம் பகுதியில் செயல்படும் அரசு சார்நிலை கருவூலகத்தில் நீதிமன்ற முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் கேட்டால் எங்களிடம் வினியோகம் இல்லை என தெரிவித்து வருகின்றனர். இதனால் முத்திரைத்தாள் கட்டண வேண்டி ஒவ்வொரு வக்கீலும் மாதமொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை முத்திரைத்தாள் வாங்க வேண்டியுள்ளது. இந்த கருவூலகத்தில் வினியோகம் இல்லாததால் ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் செலவு செய்து வாங்கி கொடுத்தாலும் பயனாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது.
இழப்பீடு
இதனால் வக்கீல்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் மன உளைச்சலும் ஏற்பட்டு வருகிறது. தாராபுரத்தில் கருவூலகம் இருந்தும் வெளியில் வாங்குவதால் அரசுக்கு கிடைக்கவேண்டிய பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. எனவே தாராபுரம் சார்நிலை கருவூலக அலுவலர்கள் மக்கள் சேவையை கருத்தில்கொண்டு முத்திரைத்தாள் அரசிடமிருந்து பெற கோர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story