குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த 6-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொடியேற்றம், சூரசம்ஹாரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் முதல் 4 நாட்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் மனைவி, பேரனுடன் குலசேகரன்பட்டினம் முத்தரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரோஜாலி சுமதா தலைமையில் நிர்வாகஅதிகாரி கலைவாணன் தலைமையில் ஹரிஷ்பட்டர் வரவேற்பளித்தார்.
Related Tags :
Next Story