பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்


பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
x
தினத்தந்தி 12 Oct 2021 6:31 PM IST (Updated: 12 Oct 2021 6:31 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்புகள் வாங்கிக்கொடுப்பதாக கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

திருப்பூர்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்புகள் வாங்கிக்கொடுப்பதாக கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று  கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
இடைத்தரகர்கள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.  இதில் வீடு ஒதுக்கீடு செய்வதற்காக பொதுமக்களிடம் நேரடி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள், மாவட்ட நிர்வாகம் மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
பொதுமக்களிடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்புகள் வாங்கித்தருவதாக வெளி நபர்களோ, இடைத்தரகர்களோ கூறினால் அதை நம்பி யாரும் பணம் எதுவும் கொடுத்து ஏமாற வேண்டாம். அவ்வாறு வெளிநபர்களுக்கு பணம் கொடுத்தால் அதற்கு அரசோ, மாவட்ட நிர்வாகமோ, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமோ எந்தவித பொறுப்பும் ஏற்காது.
கடும் நடவடிக்கை
இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story