மாவட்ட செய்திகள்

பூச்சி மருந்தை குடித்த விவசாயி சாவு + "||" + former death like wines drink as poison

பூச்சி மருந்தை குடித்த விவசாயி சாவு

பூச்சி மருந்தை குடித்த விவசாயி சாவு
பூச்சி மருந்தை குடித்த விவசாயி சாவு
வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே உள்ள மாந்தபுரம் சூடக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி வயது 56. விவசாயி. மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து அதை வீட்டில் வைத்து குடிப்பது வழக்கம். அதன்படி டாஸ்மாக் கடையில் மதுவாங்கி வந்து வீட்டில் உள்ள குளியல் அறையில் வைத்துள்ளார். அதன் அருகில் செடிகளுக்கு அடிக்க பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தையும் வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது பாட்டிலை எடுத்து குடிப்பதற்கு பதிலாக, அடுத்த பாட்டிலில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
----