கோவில்பட்டியில் டிரைவர் வீட்டில் 11 பவுன் நகைதிருட்டு


கோவில்பட்டியில் டிரைவர் வீட்டில் 11 பவுன் நகைதிருட்டு
x
தினத்தந்தி 12 Oct 2021 6:50 PM IST (Updated: 12 Oct 2021 6:50 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி டிரைவர் வீட்டில் 11 பவுன் நகை திருடப்பட்டது

 கோவில்பட்டி:
கோவில்பட்டி ஊரணி 2-வது தெருவில் குடியிருப்பவர் காமராஜ் மகன் வேல்குமார் (வயது 35). கார் டிரைவர். இவரது மனைவி ஆதிலட்சுமி (32). சம்பவ தினத்தன்று இரவு இருவரும் வீட்டின் கதவைத் திறந்து வைத்து தூங்கினார்களாம். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோ திறந்து கிடந்ததாம், இதில் அதிர்ச்சி அடைந்த வேல்குமார் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகசுந்தரம், காந்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story