அனைத்து நாட்களும் கோவிலை திறக்கக்கோரி இந்து தமிழர் கட்சியினர் மனு
அனைத்து நாட்களும் கோவிலை திறக்கக்கோரி இந்து தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.
பழனி:
இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் பழனி முருகன் கோவில் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது, தமிழகத்தில் அனைத்து நாட்களும் கோவில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கை தொடர்பான மனுவை கோவில் அலுவலகத்தில் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ராம.ரவிக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் தமிழகத்தில் அனைத்து நாட்களும் கோவிலை திறக்க வேண்டும். பழனி கோவில் பாதுகாப்பு பணிக்கு அறநிலையத்துறை சார்பில் "திருக்கோவில் பாதுகாப்பு படை" என்ற சிறப்பு படையை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் கோவில் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். பழனி கோவிலில் தற்காலிகமாக பணியாற்றும் இசைக்கலைஞர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story